Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Freelancer / 2025 ஜனவரி 02 , மு.ப. 10:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூ ஓர்லேன்ஸ் நகரில், புத்தாண்டு கொண்டாட்ட கூட்டத்தில் அதிவேகத்தில் கார் புகுந்த விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள நியூ ஓர்லேன்ஸ் நகரில், புத்தாண்டு கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெற்று வந்தது.
அப்போது திடீரென யாரும் எதிர்பாராத விதமாக அந்த கூட்டத்துக்குள் அதிவேகத்தில் ஒரு கார் புகுந்து அங்கிருந்தவர்கள் மீது பலமாக மோதியது.
இந்த விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்ததுடன், 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இதனிடையே வேகமாக கூட்டத்தில் மோதிய காரின் சாரதி, திடீரென தனது துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை நோக்கி சுடத்தொடங்கியதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக நியூ ஓர்லேன்ஸ் காவல் துறை (NOPD) செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,
“முதற்கட்ட விசாரணையின்படி மக்கள் கூட்டத்தின் மீது கார் மோதியிருக்கலாம். காயங்கள் தற்போது உறுதிப்படுத்தப்படாத நிலையில், இறப்புகள் அதிகமாக பதிவாகியுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், உயிரிழந்தவர்களின் சரியான எண்ணிக்கை வெளியாகவில்லை. அங்கிருந்த போர்பன் வீதியில் புத்தாண்டைக் கொண்டாட ஆயிரக்கணக்கானோர் கூடியதாக கூறப்படுகிறது. அவசரகால குழுக்கள் நெருக்கடியை சமாளிப்பதால், தற்போதைக்கு அந்தப் பகுதியில் பயணிப்பதை தவிர்க்குமாறு, பொதுமக்களை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
26 minute ago
55 minute ago
2 hours ago