Editorial / 2019 மார்ச் 12 , மு.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் ஜம்மு காஷ்மிர் மாநிலத்தின் புல்வாமாவில் நடந்த கார்த் தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியொருவரான ஜைஷ்-ஈ-மொஹமட்டின் தளபதி முடாசிர் அஹமட் கான், புல்வாமாவின் ட்ராலில், நேற்று முன்தினமிரவு இடம்பெற்ற மோதலில் கொல்லப்பட்ட ஆயுததாரிகள் இருவரில் உள்ளடங்குவதாக, ஜம்மு காஷ்மிர் பொலிஸ் பேச்ச்சாளர், நேற்று (11) தெரிவித்துள்ளார்.
இதுவரையில் இடம்பெற்ற விசாரணைகள், வாகனத் தொடரணி மீது கடந்த மாதம் 14ஆம் திகதி நடாத்தப்பட்ட, துணை பொலிஸார் 40 பேரைக் கொன்ற தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியொருவர் முடாசிர் அஹமட் கான் என வெளிப்படுத்தியுள்ளதாக, அறிக்கையொன்றில் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ட்ராலின் பிங்லிஷ் கிராமத்திலுள்ள வசிப்பிடப் பகுதியொன்றினுள், முடாசிர் அஹமட் கானும் அவரது உள்ளூரல்லவராத உதவியாளரும், நேற்று முன்தினம் பிற்பகலில் சிக்கியிருந்த நிலையில், முடாசிர் அஹமட் கானின் சடலத்தை அவரது குடும்பத்தினர் அடையாளங்காட்டிய நிலையில் அவர்களிடம் சடலம் கையளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மோதல் இடம்பெற்ற இடத்திலிருந்து மீட்கப்பட்ட பொருட்களிலிருந்து, கொல்லப்பட்ட மற்றைய ஆயுததாரி, காலிட் என்ற குறியீட்டுப் பெயரைக் கொண்ட பாகிஸ்தானியப் பிரஜையொருவர் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பொலிஸாரின் தரவுகளின்படி, குறித்த ஆயுததாரிகள் இருவரும் ஜைஷ்-ஈ-மொஹமட் குழுவைச் சேர்ந்தவர்கள் எனவும் பாதுகாப்புக் கட்டமைப்புகள் மீதான தாக்குதல் உள்ளடங்கடலான தொடர் குற்றங்களுக்காக தேடப்படுவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும், துணைப் பொலிஸாரின் முகாமொன்றின் மீதான தாக்குதல் உள்ளடங்கலாக, சில தாக்குதல்களை திட்டமிட்டு நடத்தியதில் பங்கேற்பதாகக் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, மோதல் இடம்பெற்ற இடத்திலிருந்து, றைபிள்கள் உள்ளடங்கலாக ஆயுதங்களும் வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மூன்று ஆயுததாரிகளைக் கொன்றதாக இராணுவம் தெரிவித்திருந்த நிலையில், மோதல் இடம்பெற்ற இடத்திலிருந்து இரண்டு சடலங்களையே மீட்டதாக பொலிஸார் கூறியிருந்தனர்
2 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago