Shanmugan Murugavel / 2026 ஜனவரி 21 , மு.ப. 11:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

டேவிட், விக்டோரியா பெக்காமின் சிரேஷ்ட மகனான புரூக்லின் பெல்ட்ஸ் பெக்காம், தனது திருமணத்தைக் குலைக்க தனது கட்டுப்படுத்தும் பெற்றோர் முயன்றதாகவும், அவர்களுடன் மீள் நல்லிணகத்துக்குப் போக விரும்பவில்லையெனக் கூறியுள்ளார்.
பெக்காம் வியாபாரம் எப்போதும் முன்னிற்கையில், சிறப்பான குடும்பமென்பதை முன்னிறுத்திப் பாதுகாப்பதற்காக எண்ணிக்கையற்ற பொய்களை தனது பெற்றோர் ஊடகங்களில் உட்செலுத்துவதாக 26 வயதான ப்ரூக்லின் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அமெரிக்க செல்வந்த வர்த்தகரான நெல்சன் பெல்ட்ஸின் மகளான நிகொலா பெல்ட்ஸை ப்ரூக்லின் 2022-இல் திருமணம் முடித்த பின்னர் ப்ரூக்லினுக்கும், அவரது பெற்றோருக்கும் பதற்றம் நிலவி வருவதாகக் கூறப்படுகிறது.
தனது திருமணத்தின்போது தனது மனைவியுடனான தனது முதலாவது நடனத்தை தனது தாய் விக்டோரியா திருடியதாகத் தெரிவித்த ப்ரூக்லின், அனைவரின் முன்னால் முறையற்ற விதத்தில் தன் மீது நடனமாடியதாகக் கூறியுள்ளார்.
இதேவேளை திருமணத்தில் தனது மனைவியின் உடையைத் தயாரிப்பதை இறுதி நேரத்தில் தாய் நிறுத்தியதாக ப்ரூக்லின் குறிப்பிட்டுள்ளார். எனினும் அந்நேரத்தில் விக்டோரியா தயாரித்த உடையை நிகொலா அணிய மறுத்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் பிரச்சினையை மறுத்த நிகொலா, உடை உரிய நேரத்தில் முடிக்க முடியாதென விக்டோரியா உணர்ந்ததாகக் கூறியிருந்தார்.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago