2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

’பொருள் சேதம் மாத்திரமே ஏற்பட்டது’

Editorial   / 2019 மார்ச் 29 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரியாவின் வடமேற்குப் பகுதியிலுள்ள அலப்​போ நகரின் தொழிற்று​றை மண்டலத்தில், இஸ்ரேலால், நேற்று முன்தினம் (17) மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது, பொருள் சேதம் ஏற்பட்டிருப்பதாக, சிரிய இராணுவம் தெரிவித்துள்ளது. எனினும், தெகுரான் படையினரால் முன்னெடுக்கப்பட்ட இத்தாக்குதலின் போது, ஈரானின் வெடிமருந்துகள் களஞ்சியசாலையும் இராணுவ விமானநிலையமும் தாக்குதலுக்குள்ளானது என, எதிர்த்தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

சிரிய இராணுவத்தால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், வட சிரியாவிலுள்ள ஷேக் நஜார்​ தொழிற்றுறை மண்டலத்தை குறிவைத்து, இந்த இஸ்ரேலியத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது என்றும் இதன்போது, அவர்களது பல ஏவுகணைகள் வீழ்த்தப்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இது தொடர்பில், இஸ்ரேலிய தரப்பிலிருந்து எந்தவொரு கருத்தும் வெளியிடப்படவில்லை. நாட்டின் இரண்டாவது பெரிய நகரமும் பாரிய தொழிற்றுறை மய்யமுமான அலப்போவில் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலின் போது, நகரத்துக்கான மின்சாரம் முற்றாகத் தடைப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரிய இராணுவத்துக்கு எதிராக பல ஆண்டுகளாக தாக்குதல்களை மேற்கொண்டு வரும் போராளிகளைத் தோற்கடிப்பதற்காக, உள்ளூர் போராளிகளுக்கு ஆதரவு வழங்கி, ஈரான் இராணுவத்தினர் அமைத்துள்ள காவலரன்களின் பிரதான பிரதேசமாக, அலப்போ காணப்படுவதாக, இராணுவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதலின் போது, ஈரானுக்குச் சொந்தமான வெடிபொருள்கள் களஞ்சியசாலையும் ஈரானின் தளவமைப்பு மய்யமும் நேரடியாக தாக்குதலுக்கு உள்ளானது என, தெகுரான் படையினர் குறித்து நன்கு அறிந்த இரண்டு எதிரணியினர் தெரிவித்துள்ளனர்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X