Editorial / 2026 மார்ச் 26 , பி.ப. 05:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

மத்திய கிழக்கு மோதல் காரணமாகக் கச்சா எண்ணெய் விநியோக சங்கிலியில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக உலகெங்கும் கச்சா எண்ணெய் விலை உயர ஆரம்பித்துவிட்டது. இதனால் பெட்ரோல், டீசல் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்தச் சூழலில் தான் விலையுயர்வைக் கட்டுப்படுத்தவும் பொருளாதாரத்தைப் பாதுகாக்கவும் ஜப்பான் அரசு மிக முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது.
மத்திய கிழக்கில் வெடித்துள்ள மோதல் இப்போதைக்கு முடிவது போலத் தெரியவில்லை. இந்த மோதல் 4வது வாரமாகத் தொடர்கிறது. இதனால் கச்சா எண்ணெய் விலை உலகெங்கும் உயர்ந்து வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தியில் சில குறிப்பிட்ட நாடுகளின் கப்பல்களை அனுமதிப்பதாக ஈரான் கூறினாலும், அங்குத் தெளிவு இல்லாத ஒரு சூழலே நிலவுகிறது.
இப்படி ஒரு குழப்பம் நிலவி வரும் சூழலில், ஜப்பான் மிக முக்கியமான முடிவை எடுத்துள்ளது. விநியோக சங்கிலி பிரச்சனை காரணமாக கச்சா எண்ணெய் விலைகள் உயர்ந்து வருவதால் இது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இதன் பொருளாதாரத் தாக்கத்தைக் குறைக்க ஜப்பான் அரசு தனது கையிருப்பில் இருந்து 30 நாட்களுக்குத் தேவையான எண்ணெய்யை ரிலீஸ் செய்யத் தொடங்கியுள்ளது.
கையிருப்பு ரிலீஸ் கடந்த திங்கட்கிழமை தனியார் துறை கையிருப்பில் இருந்து 15 நாட்களுக்கான எண்ணெய் ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில், இப்போது மேலும் 30 நாள் கையிருப்பு ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள 11 சேமிப்பு மையங்களிலிருந்து மொத்தம் 8.5 மில்லியன் கிலோலிட்டர் எண்ணெய்யை விற்க அரசு திட்டமிட்டுள்ளது. அத்துடன், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட மூன்று மத்திய கிழக்கு நாடுகள் ஜப்பானில் வைத்திருக்கும் கூட்டு இருப்பில் இருந்து ஐந்து நாட்களுக்குத் தேவையான எண்ணெய்யையும் அடுத்த செவ்வாய்க்கிழமைக்குள் டீலர்களுக்கு அனுப்பப்படும் என கூறப்பட்டுள்ளது.
ஜப்பான் தனது கச்சா எண்ணெய் இறக்குமதியில் 90 சதவீதத்திற்கும் மேலாக மத்திய கிழக்கைச் சார்ந்துள்ளது. பிப்ரவரி பிற்பகுதியில் மத்திய கிழக்கு மோதல் வெடித்ததை அடுத்து ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இது ஜப்பான் பொருளாதாரத்தைப் பாதிக்கும் ஆபத்து உருவாகியுள்ளது.. அதாவது ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு இருப்பதால் பெட்ரோல், டீசல் பெட்ரோல் விலைகளில் கடுமையாக உயர்ந்து வருகிறது. அதைக் கட்டுக்குள் வைக்கவே ஜப்பான் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago