Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Freelancer / 2024 நவம்பர் 19 , மு.ப. 10:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகில் நடைபெற்றுவரும் போர்களால், தெற்கு நாடுகளில் உணவு, எரிபொருள், உரம் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாக, இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஜி20 உச்சிமாநாட்டில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தெற்கு நாடுகளுக்கு முக்கியத்துவம் அந்நாடுகள் சந்திக்கும் சவால்களை மனதில் வைத்து செயற்பட்டால் மட்டுமே நமது ஆலோசனைகள் வெற்றிபெறும் என்றும், மோடி எடுத்துரைத்தார்.
ஜி20 உச்சிமாநாடு, பிரேஸில் நாட்டின் டியோடி ஜெனிரோ நகரில், திங்கட்கிழமை (18) ஆரம்பமானது.
இந்த உச்சிமாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, பிரேஸில், பிரான்ஸ், சீனா, ஜெர்மனி, அவுஸ்திரேலியா உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இம்முறை “சமூக உள்ளடக்கம் மற்றும் பட்டினி, வறுமைக்கு எதிரான போராட்டம்” என்ற தலைப்பில் நடப்பு ஜி20 உச்சிமாநாடு நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
1 hours ago
3 hours ago