Editorial / 2025 ஜூலை 13 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

மியான்மர் நாட்டின் மத்திய மாகாணத்தில், அமைந்துள்ள பௌத்த மடத்தின் மீது சனிக்கிழமை (12) நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் அங்கு தஞ்சமடைந்திருந்த மக்களில் 23 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மியன்மாரின் சாகிங் பிராந்தியத்தின் சாகிங் டவுன்ஷிப்பில் உள்ள லிண்டலு கிராமத்தில் இடம்பெயர்ந்த பொதுமக்களுக்கு அடைக்கலம் கொடுத்த மடாலயத்தின் மீது மியான்மர் இராணுவ ஆட்சிக்குழு வான்வழியாக குண்டுகளை வீசியுள்ளது.
சகாயிங் மாகாணத்தில் உள்நாட்டு கிளர்ச்சிப்படைக்கும் மியான்மர் இராணுவத்துக்கும் இடையில் கடந்த சில வாரங்களாக மோதல்கள் அதிகரித்துள்ளன.
இருதரப்புக்கும் இடையில் நடைபெறும் மோதல்களிலிருந்து தப்பித்து மடத்தில் தஞ்சமடைந்திருந்த சுமார் 150-க்கும் மேற்பட்டோர் இரவு உறங்கிக்கொண்டிருந்தபோது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
47 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
4 hours ago
4 hours ago