2025 மே 19, திங்கட்கிழமை

மகாராணியின் இறுதி கிரியைகள் பற்றிய அறிவிப்பு

Freelancer   / 2022 செப்டெம்பர் 11 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி கிரியைகள் எதிர்வரும் 19 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.

இளவரசர் பிலிப் நல்லடக்கம் செய்யப்பட்ட அதே இடத்தில் அவரின் அருகிலேயே ராணியின் உடலும் நல்லடக்கம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமானார் உடல்நலக்குறைவால் கடந்த வியாழக்கிழமை (08) காலமானதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்தது.

பிரித்தானிய மகாராணியின் மறைவுக்கு உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதேவேளை, பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமானதையடுத்து வேல்ஸ் முன்னாள் இளவரசர் சார்ள்ஸ் பிரித்தானிய மன்னராக நியமிக்கப்பட்டுள்ளார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X