2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

மசூதிகள் மீதான தாக்குதல்: தாக்குதலாளியை தடுத்த விவரங்கள் வெளியாகின

Editorial   / 2019 மார்ச் 17 , பி.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்திலுள்ள மசூதிகள் மீதான தாக்குதலில் கொல்லப்பட்ட 50 பேரின் சடலங்களை, இறுதிச் சடங்குகளுக்காக அவர்களின் குடும்பங்களுக்கு வழங்க அதிகாரிகள் ஆரம்பித்துள்ள நிலையில், தாக்குதலாளியை தடுத்த விவரங்கள் இன்று (17) வெளியாகியுள்ளன.

கிறைஸ்ட்சேர்ச்சில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தாக்குதலை மேற்கொண்ட, வெள்ளை மேலாதிக்கவாதி எனச் சந்தேகிக்கப்படும் 28 வயதான அவுஸ்திரேலியரான பிரென்டன் டரான்ட் மீது நேற்று முன்தினம் கொலைக்குற்றச்சாட்டு நேற்று முன்தினம் சுமத்ப்பட்டிருந்தது. விசாரணையில்லாமல் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், அடுத்த மாதம் ஐந்தாம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும்போது மேலும் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்வார் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையிலேயே, இரண்டாவது மசூதியில் துப்பாக்கிதாரியுடன் மோதலில் ஈடுபட்டு, மேலதிக இறப்புகளைத் தடுத்த 48 வயதான அப்துல் அஸூஸ் புகழப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த அப்துல் அஸீஸ், துப்பாக்கிப் பிரயோகத்தையடுத்து, மசூத்திக்கு வெளியே சென்று, துப்பாக்கிதாரி வீழ்த்திய ரவையில்லாத துப்பாக்கியொன்றை எடுத்துள்ளார். அதன் மூலம் துப்பாக்கிதாரி காருக்குள் இருக்கும்போது, கண்ணாடிக்குள்ளால் எறிந்துள்ளார். அப்போது தாக்குதலாளி, அப்துல் அஸீஸை முறைத்து விட்டு பின்னர் அங்கிருந்து புறப்பட்டுள்ளார்.

இதேவேளை, துப்பாக்கிதாரியின் காணொளியில், பாகிஸ்தானைச் சேர்ந்த நயீம் ரஷீட், தான் கொல்லப்படுவதற்கு முன் அவருடன் முரண்படுவது பதிவாகியிருந்தது.

40க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட அல் நூர் மசூதியில், இன்னொரு சடலத்தை பொலிஸார் கண்டுபிடித்திருந்த நிலையிலேயே இறந்தோரின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்திருந்தது. உயர் எண்ணிக்கையான மகசீன்களுடனான அரைத்தன்னியக்க றைபிளொன்றின் மூலமே இங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கிதாரி துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு இரண்டாவது மசூதிக்குச் சென்றிருந்தார்.

பின்னர், இரண்டாவது மசூதியிலிருந்து செல்லும்போதே, சந்தேகநபரின் வாகனத்தின் மீது மோதி, அவரை பொலிஸார் கைது செய்திருந்தனர். இந்நிலையில், துப்பாக்கிப் பிரயோகங்களுடன் தொடர்புடையாதாகக் குற்றஞ்சாட்டப்பட்டவர் இவர் மட்டுமே என பொலிஸ் ஆணையாளர் மைக் புஷ் தெரிவித்ததுடன், முன்னர் தடுத்துவைக்கப்பட்ட மூவர் தொடர்புபடவில்லை எனக் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X