2025 ஜூலை 14, திங்கட்கிழமை

மது பிரியர்களின் நாடு

Ilango Bharathy   / 2023 மே 08 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகிலேயே  மது அருந்துபவர்கள் அதிகமாக இருக்கும் நாடாக போர்த்துகல் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

 போர்த்துகலில் ஒவ்வொரு தனி மனிதனும் ஆண்டுக்கு சுமார் 52 லீற்றர் மது, அதாவது வாரத்திற்குக் கிட்டத்தட்ட ஒரு லீற்றர் மது அருந்துகின்றார்களாம்.

அதுமட்டுமல்லாது அந்நாட்டில் ஒருவர் போதைப்பொருள் வைத்திருப்பது சட்டப்படி குற்றமில்லை. ஆனால், போதைப்பொருள் வாங்குவதும் விற்பனை செய்வதும் குற்றமாகக் கருதப்படுகின்றது.

 இச்சட்டம் 2001 ஆம் ஆண்டு அமுல்படுத்தப்பட்டது. எனினும் இங்கு குற்றங்கள் மிகவும் குறைந்த அளவிலேயே இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்ச குற்றத்திற்கே இங்கு 25 ஆண்டுகள் தான் தண்டனை வழங்கப்படுகிறது. இந்நாட்டில் மரண தண்டனை என்பது கிடையாது. அதனால் உலகின் பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் போர்த்துகலும் ஒன்றாகவுள்ளது. மேலும் இங்கு கல்வியறிவு விகிதம் 97 சதவீதமாக உள்ளது.

தனிநபர் மது நுகர்வில் 2 ஆம் , 3 ஆம் , 4 ஆம் இடத்தில் முறையே பிரான்ஸ் ,இத்தாலி மற்றும்  சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .