2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

மனைவி பிரிந்ததால், பீர் மட்டும் குடித்த கணவன் மரணம்

Janu   / 2025 ஜூலை 27 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

மனைவி விவாகரத்து செய்ததால் மிகவும் வருத்தமடைந்த ஒருவர், ஒரு மாதமாக எதையும் சாப்பிடாமல்,பீர்  மட்டுமே குடித்து உயிரிழந்த  சம்பவம் தாய்லாந்தில் இடம்பெற்றுள்ளது.

44 வயதான தவீசக் தனது மனைவியால் விவாகரத்து செய்யப்பட்டார். அவர்களுக்கு பதினாறு வயது மகன் இருப்பதாகவும் மகனை தவீசக்கிடம் விட்டுவிட்டு அப்பெண் வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

மனைவி தன்னை விட்டுச் சென்றதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான தவீசக், சாப்பிடுவதை முற்றிலுமாக நிறுத்தி,  நாள் முழுவதும் பீர் குடித்துக்கொண்டிருந்துள்ளார்.

இதனால் அவரது உறுப்புகள் செயலிழந்து, அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளது. ஒரு தொண்டு நிறுவனம் தவீசக்கை மருத்துவமனையில் சேர்க்க முயன்ற போதும் குறித்த  நிறுவனங்கள் அவரது வீட்டை அடைவதற்குள் தவீசக் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸார் அவரது அறையில் இருந்து 100 பீர் பாட்டில்களைக் கண்டுபிடித்துள்ளனர். அதிகப்படியான மது அருந்தியதால் அவர் உயிரிழந்துள்ளமை உறுதிபடுத்தப்பட்டுள்ளது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X