2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

மனிதாபிமான உதவியின் முதலாவது தொகுதி வெனிசுவேலாவைச் சென்றடைந்தது

Editorial   / 2019 ஏப்ரல் 18 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

செஞ்சிலுவை சங்கத்தின் மனிதாபிமான உதவியின் முதலாவது தொகுதி, வெனிசுவேலாவை நேற்று முன்தினம் சென்றடைததாக செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதிகளும், தேசிய சபையின் உறுப்பினரான மிக்கேல் பிஸாரோவும் தெரிவித்துள்ளனர்.

உதவியைக் கொண்டு வருவதற்கு செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணக்கமொன்றுக்கு தனது அரசாங்கம் வந்துள்ளதாக வெனிசுவேலாவின் ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோ கடந்த வாரம் தெரிவித்திருந்த நிலையிலேயே தற்போது உதவி சென்றடைந்துள்ளது. மனிதாபிமான நெருக்கடி இருப்பதை மறுத்திருந்த ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோ, உதவி வரும் முயற்சிகளை முன்னர் தடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில், தான் தலைமை தாங்கும் புரட்சிகர அரசாங்கத்துடன் இணைந்து வெனிசுவேலாவுக்கான முதலாவது உதவியை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் நேற்று முன்தினம் வழங்கியதாக அரச தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட உரையொன்றில் தெரிவித்த ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோ, அது சட்டரீதியாக, ஒழுங்கான முறையில் சர்வதேச சட்டங்களின் கீழ்ப்படி பெற்றுக் கொள்ளப்பட்டதாகக் கூறியுள்ளார்.

இந்நிலையில், உதவி வந்தடைந்ததில் ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோ அரசாங்கத்தின் குறைந்த பட்சத் தலையீடு நேர்மறையான படியொன்று என தேசிய சபையின் எதிர்கட்சி உறுப்பினரான மிக்கேல் பிஸாரோ தெரிவித்துள்ளார்.

பனாமாவிலிருந்து விமானம் மூலம் வந்தடைந்த குறித்த உதவியில், 14 மின் பிறப்பாக்கிகள், 5,000 லீற்றர் சுத்திகரிக்கப்பட்ட நீர், தலா 10,000 நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கக்கூடிய மூன்று சத்திரசிகிச்சை உபகரணங்கள் உள்ளடங்கியிருந்ததாக செஞ்சிலுவைச் சங்கம் கூறியுள்ளது

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X