Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 ஒக்டோபர் 04 , மு.ப. 09:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகின் மிக உயர்ந்த பரிசாகக் கருதப்படும் நோபல் பரிசானது ஒவ்வொறு ஆண்டும் அமைதி, இலக்கியம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம் மற்றும் மருத்துவ துறைகளில் தலை சிறந்தவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் 2022 ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு நேற்றைய தினம் சுவீடனைச் சேர்ந்த ஸ்வாண்டே பாபோவிற்கு (Svante Paabo ) அறிவிக்கப்பட்டுள்ளது.
`அழிந்துபோன ஹோமினின்களின் மரபணுக்கள் மற்றும் மனித பரிணாமம் பற்றிய அவரது கண்டுபிடிப்புகளுக்காகவே` அவருக்கு இப்பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று (04) இயற்பியலுக்கான விருதும்,5,6,7,10 ஆம் திகதிகளில் வேதியியல் ,இலக்கியம், அமைதி,பொருளாதாரம் ஆகியவற்றுக்கான விருதுகளும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
54 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
2 hours ago