2025 மே 17, சனிக்கிழமை

மலைப்பாம்புகளுக்கு `ஜி.பி.எஸ்` பொருத்த முடிவு

Ilango Bharathy   / 2023 பெப்ரவரி 23 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அமெரிக்காவில் ஊருக்குள் வலம் வரும் மலைப்பாம்புகளுக்கு `ஜி.பி.எஸ்` கருவிகளைப்  பொருத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

அமெரிக்காவில் புளோரிடா உள்ளிட்ட பல  பகுதிகளில் ஏராளமான பர்மிய மலைப்பாம்புகள் உள்ளன. 20 அடிக்கு மேல் வளரும் இவ்வகைப் பாம்புகளின் எண்ணிக்கையானது சமீப காலமாக அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தவிர வீடுகளில் வளர்க்கப்படும் மலைப்பாம்புகளையும் அவற்றின் உரிமையாளர்கள் காட்டுக்குள் விட்டு விடுவதாகக் கூறப்படுகின்றது.

இதனால் உணவு தேடி அலையும் இப்பாம்புகள் ரக்கூன்கள் மற்றும் ஓபோஸம்கள் உள்ளிட்ட விலங்குகளைத் தேடி ஊருக்குள் வந்து விடுவதாகவும், இதனால் பொதுமக்கள் பாதிப்படைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஊருக்குள் வரும் மலைப்பாம்புகளை அடையாளம் காணும் வகையில் அவற்றுக்கு ஜிபிஎஸ் கருவிகளைப் பொருத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .