Freelancer / 2024 செப்டெம்பர் 03 , பி.ப. 02:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

சீனாவில் நின்று கொண்டிருந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மீது பேருந்து மோதியதில் 10 மாணவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கிழக்கு சீனாவில் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள தையான் நகரில் உள்ள ஒரு நடுநிலைப் பாடசாலையின் வாயிலில், இன்று காலை பேருந்துக்காக காத்திருந்த மாணவர்கள் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் 11 பேர் பலியான நிலையில், 13 பேர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், விபத்துக்குள்ளான பேருந்து மாணவர்களை ஏற்றிச் செல்வதற்காகவே பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் விபத்து குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.S
15 minute ago
19 minute ago
25 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
19 minute ago
25 minute ago
52 minute ago