Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 மார்ச் 09 , மு.ப. 10:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
4 வருட இராணுவ ஆட்சிக்கு பிறகு மியான்மரில் ஜனநாயக முறையில் பொதுத் தேர்தல் நடத்தப்படுவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மியான்மரின் இராணுவத் தலைவர் ஜெனரல் மின் ஆங், அடுத்த 10 மாதங்களுக்குள் பொதுத் தேர்தல்களை நடத்துவதாக அறிவித்துள்ளார் என, மியான்மர் அரசு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
மியான்மரின் இராணுவ அரசுக்கு ஆதரவாக இருக்கும் நாடான பெலாரஸ் நாட்டிற்கு அரசு முறைப் பயணமாக சென்றுள்ள மின் ஆங் அங்கு செய்தியாளர் சந்திப்பு நடத்தினார்.
அதில் அவர், “வரும் டிசெம்பர் மாதத்துக்குள் அல்லது 2026 ஜனவரி மாதத்துக்குள் தேர்தல்கள் நடத்தப்படும்” என கூறியுள்ளார். மேலும், இந்த தேர்தலில் போட்டியிட ஏற்கெனவே மியான்மரின் 53 அரசியல் கட்சிகள் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
ஜனநாயக ஆதரவு போராளிகளும், தன்னாட்சி கோரும் சில இனக்குழுக்களை சேர்ந்த கிளர்ச்சியாளர்களும் மியான்மர் இராணுவத்துக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நேரத்தில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு, ஆவுன் சன் சுகியின் ஆட்சியைக் கவிழ்த்து இராணுவ அரசு அமைக்கப்பட்டதற்கு எதிராக அந்நாட்டு மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் அறிவிப்பு, இராணுவ அரசின் ஆதிக்கத்தை தக்கவைத்துக்கொள்ள மேற்கொள்ளப்படும் முயற்சி என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .