Freelancer / 2023 நவம்பர் 15 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான்(71) பாகிஸ்தான் பிரதமராக பதவி வகித்த போது பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதாக அவர் மீது 120க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில் தோஷகானா ஊழல் வழக்கில் கடந்த ஆகஸ்ட் 5ம் திகதி 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்ட போதும் வேறொரு வழக்கில் அவர் சிறையில் உள்ளார்.
இந்நிலையில் தோஷகானா ஊழல் வழக்கு, அல்-காதிர் அறக்கட்டளை ஊழல் வழக்குகளில் இம்ரான் கானுக்கு எதிராக பிடியாணை பிறப்பித்து பாகிஸ்தான் ஊழல் தடுப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (14) உத்தரவிட்டது. இதையடுத்து 2 வழக்குளில் இம்ரான் கான் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
2 hours ago
2 hours ago
3 hours ago
10 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
10 May 2026