2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

மீண்டும் போட்டியிடுவதை கைவிட்டார் ஜனாதிபதி

Editorial   / 2019 மார்ச் 13 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐந்தாவது தடவையாக ஜனாதிபதிப் பதவிக்கு போட்டியிடுவதை, அல்ஜீரிய ஜனாதிபதி அப்துல்அஸீஸ் புதுபீகா, நேற்று முன்தினம் கைவிட்டுள்ளார். ஜனாதிபதி அப்துல்அஸீஸ் புதுபீகாவின் 20 ஆண்டு ஆட்சிக்கெதிராக பல வாரங்களாக இடம்பெற்ற பாரிய ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்தே, ஐந்தாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதை அவர் கைவிட்டுள்ளார்.

இதேவேளை, அடுத்த மாதம் இடம்பெறவிருந்த ஜனாதிபதித் தேர்தலை ஒத்தி வைத்துள்ள ஜனாதிபதி அப்துல்அஸீஸ் புதுபீகா, சமூக, பொருளாதார சீரமைப்புக்கு உறுதியளித்துள்ளார்.

இந்நிலையில், ஜனாதிபதி அப்துல்அஸீஸ் புதுபீகாவின் குறித்த அறிவிப்பைத் தொடர்ந்து சனத்திரளானது நேற்று முன்தினம் பிற்பகல் மீண்டும் வீதிகளுக்கு வந்திருந்தது. நூற்றுக்கணக்கானோர் மேலும் கீழும் குதூகலத்தில் துள்ளிக் குதித்ததுடன், கார்களும் ஒலியெழுப்பியிருந்தன.

எவ்வாறானினும், எப்போது பதவி விலகுவேவென் என ஜனாதிபதி அப்துல்அஸீஸ் புதுபீகா தெரிவித்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 82 வயதான ஜனாதிபதி அப்துல்அஸீஸ் புதுபீகா, 2013ஆம் ஆண்டு நோய்வாய்ப்பட்ட பின்னர் அரிதாகவே பொதுவெளியில் தோன்றுகின்றமை குறிப்பிடத்தக்கது

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X