Editorial / 2020 மே 06 , பி.ப. 03:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
முகக்கவசத்தை வாங்கி அணிய அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மறுத்ததாக கூறப்படுகிறது.
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் பீனிக்ஸ் என்ற இடத்தில் முகக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு சக அதிகாரிகளுடன் நேரில் சென்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், பார்வையிட்டுள்ளார்.
அப்போது ஆலை நிர்வாகி கொடுத்த முகக்கவசத்தை வாங்கி அணிய ட்ரம்ப் மறுத்ததாக கூறப்படுகிறது.
கொரோனா காரணமாக ஆலைக்குள் நுழைபவர்கள் சானிடைசரை உபயோகித்துவிட்டு, முகக்கவசத்துடன் நுழைய வேண்டும், சமூக விலகலை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் போன்ற விதிமுறைகளை, குறித்த தொழிற்சாலை நுழைவு வாயில் அறிவிப்பு பலகையில் எழுதிவைத்துள்ளனர்.
இந்த விதிமுறைகள் அனைத்தையும் ட்ரம்ப் மீறி ஆலையை பார்வையிட்ட புகைப்படம், வீடியோ காட்சி ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
51 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
1 hours ago
2 hours ago