Ilango Bharathy / 2023 பெப்ரவரி 28 , மு.ப. 10:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரான்ஸில் எவிக்நோன் என்ற பகுதியில் 57 வயதான பெண் ஒருவர் தனது நாயை நடை பயிற்சிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் அப்பெண்ணைக் கட்டி அணைத்து, வலுக்கட்டாயமாக முத்தமிட முயற்சித்துள்ளார்.
இதனால் அப்பெண்மணி அவரிடம் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அவரது நாக்கை கடித்து விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

மேலும் இது குறித்து பொலிஸ் நிலையத்திலும் அவர் புகார் அளித்துள்ளார்.
குறித்த புகாரில் ”தனது தொடைப் பகுதியில் அந்நபர் கை வைத்தார் எனவும், பின்னர் தன்னை துஷ்பிரயோகம் செய்ய முயன்றார் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தான் கடித்த நாக்கின் ஒரு பகுதியையும் அவர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் துனிசியாவைச் சேர்ந்த 30 வயதுடைய நபரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago