Editorial / 2019 மார்ச் 01 , மு.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்க்கட்சியின் தனது இராஜினாமா கோரிக்கையை, நேற்று முன்தினம் நிராகரித்துள்ள கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, மோசடி விசாரணையொன்றை எஸ்.என்.சி லவலின் குழும நிறுவனம் தவிர்ப்பதற்கு, அரசாங்க அதிகாரிகள் அவரை முறையற்ற விதத்தில் அழுத்தம் வழங்கினர் என்ற தனது முன்னாள் நீதி அமைச்சர் ஜோடி வில்சன் றேபோல்டின் குற்றச்சாட்டையும் மறுத்துள்ளார்.
பிரதிநிதிகள் சபையின் நீதி ஆணைக்குழுவில் நடந்த ஏறத்தாழ நான்கு மணி நேர விசாரணையிலேயே குறித்த கருத்தை ஜோடி வில்சன் றேபோல்ட் வெளிப்படுத்தியிருந்த நிலையில், இவ்வாண்டு ஒக்டோபர் மாத தேர்தலுக்கு முன்னரான பிரதமர் ட்ரூடோவின் மோசமான நெருக்கடி மேலும் மோசமாகியுள்ளது.
லிபிய அதிகாரிகளுக்கு கையூட்டு வழங்கிய குற்றஞ்சாட்டுகளின் விசாரணையிலிருந்து கட்டுமான நிறுவனமான எஸ்.என்.சி லவலின் குழுமம் தப்பித்துக் கொள்வதற்கு உதவுவதற்கு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான நடவடிக்கைகள் தொடர்பில் பிரதமர் ட்ரூடோவுடன் முரண்பட்டதாக ஜோடி வில்சன் றேபோல்டின் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மொன்றியலில் இடம்பெற்ற, தொலைக்காட்சியில் ஒளிரபப்பப்பட்ட செய்தியாளர் மாநாடொன்றில், ஆரம்பத்திலிருந்து தான் சொல்வது போன்று, தானும் தனது பணியாளர்களும் எப்போதும் பொருத்தமான முறையிலும் தொழில்முறையிலுமே செயற்பட்டதாக பிரதமர் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
அந்தவகையில், ஜோடி வில்சனின் றேபோல்டின் கருத்துகளை மறுப்பதாகத் தெரிவித்த பிரதமர் ட்ருடோ, பழமைவாதக் கட்சியின் தலைவர் அன்றூ ஷீரின் பதவி விலகும் கோரிக்கையை நிராகரித்துள்ளார்.
குறித்த விடயம் காரணமாக, பிரதமர் ட்ரூடோவின் தனிப்பட்ட செயலாளர் ஜெரால்ட் பட்ஸ், இம்மாத ஆரம்பத்தில் இராஜினாமா செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
4 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
7 hours ago