Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2023 ஒக்டோபர் 10 , பி.ப. 05:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் ஆபாசப் பட நடிகையான மியா கலிபா. இஸ்ரேல் போர் குறித்துக் கூறிய கருத்துகள் சர்ச்சையான நிலையில், அவர் இப்போது வேலையையும் இழந்துள்ளார்.
ஆபாசப் படங்களில் நடித்துப் புகழ் பெற்றவர் மியா கலிபா. அப்போது சர்ச்சைக்குரிய வகையில் சிக்கியதாக இவருக்கு எதிராக மிகப் பெரியளவில் எதிர்ப்பு எல்லாம் கிளம்பியது. இதற்கிடையே இப்போது மீண்டும் அவர் மற்றொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
30 வயதான மியா கலிபா இஸ்ரேல் போர் தொடர்பாக சில சர்ச்சை ட்வீட்களை போட்டார். இதற்கு நெட்டிசன்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், இதனால் அவர் வேலையையும் இழந்துள்ளார்.
இஸ்ரேல் மீது ஹமாஸ் படை கடந்த சனிக்கிழமை யாருமே எதிர்பார்க்காத வகையில் மோசமான தாக்குதலை நடத்தியது. வெறும் 20 நிமிடத்தில் சரமாரியாக 5000 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர். மேலும், இஸ்ரேல் நாட்டில் நுழைந்த ஹமாஸ் படையினர் அங்குள்ள அப்பாவி மக்களையும் சுட்டுக் கொன்றதாகக் கூறப்படுகிறது. மேலும், பலரையும் பிணையக் கைதிகளாகப் பிடித்துச் சென்றுள்ளனர்.
இதற்கிடையே மியா கலிபா தனது எக்ஸ் பக்கத்தில், சர்ச்சைக்குரிய வகையில் இரண்டு ட்வீட்களை பதிவிட்டுள்ளார்.
அவர் முதலில் தனது எக்ஸ் பக்கத்தில், "பாலஸ்தீனியர்கள் இத்தனை காலம் அடைந்த துன்பத்தைப் பார்த்தும் நீங்கள் பாலஸ்தீன ஆதரவாக இருக்கவில்லை என்றால் நீங்கள் இந்த விவகாரத்தில் தவறான இடத்தில் நிற்கிறார்கள் என்று அர்த்தம்.. வரலாறு உங்களுக்குப் பாடத்தைச் சொல்லித் தரும்" என்று பதிவிட்டுள்ளார்.
மியா கலிபா: அதேபோல மற்றொரு ட்வீட்டில் அவர், "பாலஸ்தீனத்தில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர்களிடம் யாராவது அவர்கள் படும் துயரத்தை ரெக்காட் செய்யச் சொல்ல முடியுமா" எனப் பதிவிட்டிருந்தார். பாலஸ்தீன பயங்கரவாதிகளைச் சுதந்திரப் போராட்ட வீரர்க்கள் என்று மியா கலிபா அழைத்ததே பெரும் சர்ச்சைக்குக் காரணமாக அமைந்து. நெட்டிசன்கள் பலரும் மியா கலிபா கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மியா கலிபாவின் இந்த நடவடிக்கை காரணமாக அவருடன் போட்டியிருந்த பிஸ்னஸ் டீலை உடனடியாக ரத்து செய்வதாகக் கனடா நாட்டின் பிரபல வானொலி தொகுப்பாளர் டோட் ஷாபிரோ அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "மியா கலிபா செய்த செயலை ஏற்கவே முடியாது. அவருடன் போட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்கிறோம்.. நீங்கள் செய்தது அருவருப்பானது. தயவு செய்து சிறந்த மனிதனாக மாறுங்கள். கொலை, பலாத்காரம், பிணையக் கைதிகளாக அப்பாவிகளைப் பிடித்துச் செல்வதை நீங்கள் ஏற்பது உண்மையிலேயே மோசமானது. உங்கள் செயலை கண்டிக்க வார்த்தைகளே இல்லை. உங்கள் அறியாமையைக் கண்டு வியக்கிறேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
அதேபோல அமெரிக்காவின் பிரபல அடல்ட் மெகசினான ப்ளே பாய் நிறுவனமும் மியா கலிபாவுடனான அனைத்து டீல்களையும் ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் தங்கள் கம்யூனிட்டி உறுப்பினர்களுக்கு மெயில் ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில் ஹமாஸின் தாக்குதல்களைக் கொண்டாடும் அருவருப்பான மற்றும் கண்டிக்கத்தக்கக் கருத்துக்களைக் கூறியதால் மியா கலிபா உடன் போட்ட ஒப்பந்தங்களை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
3 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago