Editorial / 2019 பெப்ரவரி 28 , மு.ப. 06:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அவரது தேசிய அவசரகாலநிலைப் பிரகடனமொன்றிலிருந்து மெக்ஸிக்க எல்லைச் சுவருக்கான நிதியைப் பெறுவதை முடக்கும் தீர்மானமொன்றை, ஐக்கிய அமெரிக்க பிரதிநிதிகள் சபை, நேற்று முன்தினம் அனுமதித்துள்ளது.
ஜனநாயக் கட்சியால் கட்டுப்படுத்தப்படும் ஐக்கிய அமெரிக்க பிரதிநிதிகள் சபை, 245-182 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் குறித்த தீர்மானத்தை நிறைவேற்றி, அதை குடியரசுக் கட்சியினரால் கட்டுப்படுத்தப்படும் செனட்டுக்கு அனுப்பியுள்ளது.
அந்தவகையில், காங்கிரஸிடமிருந்து தேவையான நிதியைப் பெற முடியாமல் போனதைத் தொடர்ந்து, ஜனாதிபதி ட்ரம்ப் பிரகடனப்படுத்திய அவசரகாலநிலமையை முடிவுக்கு கொண்டு வர ஜனநாயகக் கட்சியினருடன் இணைந்து ஜனாதிபதி ட்ரம்பின் குடியரசுக் கட்சியினர் 13 பேரும் இதன்போது வாக்களித்திருந்தனர்.
தனது முக்கிய பிரசார உறுதியான மெக்ஸிக்க எல்லைச் சுவருக்கான நிதியை, அவசரகாலநிலை பிரகடனத்தின் மூலம் ஜனாதிபதி ட்ரம்ப் பெற முடியுமென்ற நிலையில், இதற்கெதிராக பிரதிநிதிகள் சபையிலும் செனட்டிலும் தீர்மானம் கொண்டு வந்தால், அத்தீர்மானத்தை வீட்டோ செய்வேன் என ஜனாதிபதி ட்ரம்ப் அச்சுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், மைனின் செனட்டரான சுஸன் கொலின்ஸும் வட கரோலினாவின் செனட்டரான தோம் தில்ஸ் என குடியரசுக் கட்சியின் இரண்டு செனட்டர்கள் இதுவரையில் தீர்மானத்துக்கு ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ளனர். செனட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டுமானால், ஆகக்குறைந்தது குடியரசுக் கட்சியின் நான்கு செனட்டர்களாவது தீர்மானத்துக்கு ஆதரவளிக்க வேண்டும்.
எவ்வாறாயினும், ஜனாதிபதியின் வீட்டோவை மீறக்கூடிய மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பிரதிநிதிகள் சபையோ அல்லது செனட்டோ பெறுவது கடினம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
4 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
7 hours ago