Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Ilango Bharathy / 2022 ஏப்ரல் 26 , மு.ப. 09:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரபல முன்னாள் குத்துச்சண்டை வீரரான மைக் டைசன் , தன்னுடன் புகைப்படம் எடுக்க விரும்பிய ரசிகரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து ஃப்ளோரிடா நோக்கி பயணித்த விமானத்தில் தன்னுடன் பயணித்த சக பயணியையே அவர் சரமாரியாகத் தாக்கியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ தினத்தன்று விமானத்தில் மைக் டைசனுக்குப் பின்னால் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்த அந்நபர் மைக் டைசனுடன் பேசவும், புகைப்படமெடுக்கவும் முயற்சித்தார் எனவும், இதனால் ஆத்திரமடைந்த மைக்டைசன் அந்நபரை கடுமையாகத் தாக்கியுள்ளார் எனவும் இதனால் அவர் முகத்தில் இரத்தக் காயங்கள் ஏற்பட்டன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மைக்டைசன் அந்நபரைத் தாக்கும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
எனினும் குறித்த பயணி, மைக் டைசனின் மீது தண்ணீர் போத்தலை வீசியமையினாலேயே அவர் தாக்கியதாக டைசன் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
55 வயதான மைக் டைசன் இதுவரை 58 போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பதும் அதில் 50 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .