Editorial / 2019 பெப்ரவரி 12 , மு.ப. 06:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுக்கும் பிரான்ஸுக்குமிடையிலான 7.87 பில்லியன் யூரோ பெறுமதியிலான ரபேல் ஒப்பந்தத்தில் பாரிய விட்டுக்கொடுப்புகளை இந்திய அரசாங்கம் செய்திருந்ததாகவும் முக்கியமான சரத்துகளான மோசடிக்கெதிரான அபராதங்கள் போன்றவை அரசாங்களுக்கிடையிலான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் நீக்கப்பட்டிருந்ததாக தி இந்து இணையத்தளம் நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தவகையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் அரசாங்கத்தில் செய்து கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகளில் நடவடிக்கையெடுப்பதாகவும் மோசடியை இல்லாமற் செய்வதே தமது ஆட்சியின் நிகழ்ச்சி நிரல் எனத் தெரிவித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கத்துக்கு குறித்த விடயம் பின்னடைவாக நோக்கப்படுகிறது.
உயர் மட்ட அரசியல் தலையீடு காரணமாக, வழமையாக பாதுகாப்பு ஒப்பந்தங்களில் கடைப்பிடிக்கப்படும் நடைமுறையான தேவையற்ற தாக்கம் செலுத்துவதற்கான அபராதம் விதிக்கப்படும் சரத்து, டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்துக்கும் எம்.பி.டி.ஏ பிரான்ஸ் நிறுவனத்துக்குமிடையிலான ஒப்பந்தததில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.
இந்தியாவுக்கும் பிரான்ஸுக்குமிடையே இந்தியத் தலைநகர் டெல்லியில் 2016ஆம் ஆண்டு செப்டெம்பர் 23ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின்படி ரபேல் விமானப் பொதியை ரபேல் வழங்குவதுடன், எம்.பி.டி.ஏ பிரான்ஸ் நிறுவனம், இந்திய விமானப் படைக்கு ஆயுதப் பொதியை வழங்கும்.
அந்தவகையில், மோடி தலைமையிலான பாதுகாப்புத் தொடர்பான அமைச்சரவைச் செயற்குழுவால் குறித்த ஒப்பந்த ஆவணங்கள் 2016ஆம் ஆண்டு ஓகஸ்ட் 24ஆம் திகதி அனுமதிக்கப்பட்டபின்னர், அப்போது பாதுகாப்பமைச்சராக இருந்த மனோகர் பரிக்கார் தலைமையில் 2016ஆம் ஆண்டு செப்டெம்பரில் நடந்த பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு அனுமதிகப்பட்டுள்ளன.
6 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
9 hours ago