2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

ரயில் கடத்தல்:பணயக் கைதிகள் அனைவரும் மீட்பு

Freelancer   / 2025 மார்ச் 13 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானில், பயங்கரவாதிகள் கடத்திய பயணிகள் ரயிலில் சிக்கியிருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டு இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

கடத்தப்பட்ட ரயிலில் இருந்து பயணிகளை மீட்கும் பணியின் போது பாகிஸ்தான் இராணுவத்தை சேர்ந்த 28 வீரர்கள் உயிரிழந்ததாகவும், அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும், “இந்த நடவடிக்கையின் போது 346 பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர் மற்றும் 30க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்," என்றும் அந்த இராணுவ அதிகாரி, ஏ.எஃப்.பி. (AFP) நிறுவனத்திடம் தெரிவித்தார்.

இந்தத் சம்பவத்துக்கு பலூச் விடுதலைப் படை (BLA) உரிமை கோரியது. தண்டவாளத்தில் வெடிப்பு நிகழ்ந்து, மலைகளில் மறைந்திருந்த இடங்களில் இருந்து  துப்பாக்கி ஏந்தியவர்கள் வெளியே வருவது போன்ற வீடியோவை அவ்வமைப்பு வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X