2025 மே 20, செவ்வாய்க்கிழமை

ரஷ்யாவின் அதிரடி அறிவிப்பு; அதிர்ச்சியில் உலக நாடுகள்

Ilango Bharathy   / 2022 மார்ச் 21 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேட்டோ அமைப்பில் உக்ரேன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது  ரஷ்யா 25  ஆவது நாளாகத் தொடர்ந்து தாக்குதல் நடத்திவருகின்றது.

அதேசமயம் உக்ரேன்  மீதான  ரஷ்யாவின் தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக  அந்நாட்டின் மீது  அமெரிக்கா, பிரித்தானிய உள்ளிட்ட பல நாடுகள் அடுக்கடுக்கான பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன.

 மேலும்  புகழ்பெற்ற தொழில்நுட்ப  நிறுவனங்களா  மைக்ரோசொப்ட், அப்பிள், ஐ.பி,எம்  மற்றும் சர்வதேச பணப்பரிவர்த்தனை நிறுவனங்களான விசா மற்றும் மாஸ்டர் கார்ட், அத்துடன் நெட்பிளிக்ஸ், டிக்டொக்‘உள்ளிட்ட பல நிறுவனங்கள் தமது சேவையை ரஷ்யாவில் நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளன.

இந்நிலையில் ஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர் எவ்ஜெனி ஃபெடோரோவ், "மே மாதம்  1 ஆம் திகதி வரை நாட்டின் சந்தைக்குத் திரும்பாத வெளிநாட்டு நிறுவனங்களுக்கு 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட வேண்டும் ”என்று ஒரு சட்ட வரைவை முன்மொழிந்துள்ளார் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்தியானது உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X