R.Tharaniya / 2025 ஜூலை 20 , பி.ப. 03:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கம்சாட்கா தீபகற்பத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
மதியம் 12.19 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 52.87 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 160.57 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.
ரஷ்யாவின் கம்சாட்கா தீபகற்பத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.இந்த நிலநடுக்கத்தின் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
5 minute ago
22 minute ago
31 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
22 minute ago
31 minute ago
31 minute ago