Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Mayu / 2024 ஜூன் 24 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஷ்யாவின் காக்கசஸ் மாகாணம் மக்கஞ்கலா, டர்பெண்ட் ஆகிய நகரங்களில் உள்ள மதவழிபாட்டு தலங்கள் மீது பயங்கரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை (23) இரவு தாக்குதல் நடத்தினர்.
குறித்த தாக்குதல் கிறிஸ்தவ மற்றும் யூத மதவழிபாட்டு தலங்களை குறிவைத்து நடத்தப்பட்டது. மதவழிபாட்டு தலங்களுக்குள் புகுந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், மதபோதகரை கழுத்தறுத்து கொலை செய்ததோடு மதவழிபாட்டு தலங்களை தீவைத்துள்ளனர்.
இதற்கமைய, டர்பெண்ட் நகரில் உள்ள பொலிஸ் சோதனைச்சாவடியை குறிவைத்தும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 17 பேர் உயிரிழந்துள்ளதோடுபெரும்பாலானோர் பொலிஸார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து பாதுகாப்புப்படையினர் நடத்திய தாக்குதலில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த பயங்கரவாத தாக்குதல் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பால் நடத்தப்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
58 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
2 hours ago
3 hours ago