2026 ஏப்ரல் 05, ஞாயிற்றுக்கிழமை

ரஷ்ய இராணுவ விமான விபத்தில் 30 பேர் உயிரிழப்பு

Freelancer   / 2026 ஏப்ரல் 02 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்ய இராணுவ விமானம் க்ரிமியா பகுதியில் நேற்று முன்தினம் இரவு விபத்துக் குள்ளானதில் அதில் பயணம் செய்த 30 பேர் உயிரிழந்தனர். 

ரஷ்ய இராணுவத்தில் உள்ள பழமையான போக்குவரத்து விமானம் ஏஎன்-26. சோவியத் ரஷ்யா காலத்தில் 1969-1985-ம்ஆண்டுகளுக்கு இடையே தயாரிக்கப்பட்டது. இந்த விமானத்தில் நேற்று முன்தினம் 7 ஊழியர்கள், 23 பயணிகள் என மொத்தம் 30 பேர் பயணம் செய்தனர்.

இந்த விமானம் ரஷ்யாவின் க்ரிமியா பகுதியில் உள்ள செவஸ்தோபோல் என்ற இடத்தின் அருகே நேற்று முன்தினம் இரவு விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த 30 பேரும் உயிரிழந்தனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விமானம் விபத்தில் சிக்கியிருக்கலாம் எனவும் இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் ரஷ்ய இராணுவம் தெரிவித்துள்ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .