Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2023 ஓகஸ்ட் 23 , பி.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவை சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு 6.43 கோடி ரூபாய்க்கு ஃபோன் பில் வந்துள்ளது. சிறு கவனக்குறைவால் இந்த பெரிய இழப்பை அவர் எதிர்கொண்டதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தை சேர்ந்தவர் செலினா ஆரோன்ஸ். இவர் தன்னுடைய மொபைல் ப்ளானை தனது 2 சகோதரர்களுடன் பகிர்ந்து வருகிறார்.
இந்த மூவரும் டி-மொபைல் என்ற பிரபல டெலிகாம் நிறுவனத்தின் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். வழக்கமாக செலினாவுக்கு அதிகபட்சமாக ரூ. 14 ஆயிரம் வரையில் மாதம்தோறும் பில் வரும். ஆனால் கடந்த முறை ரூ. 1.63 கோடிக்கு செல்போன் பில்லை டி மொபைல் நிறுவனம் அனுப்பியுள்ளது. எதற்காக இப்படி அளவு கடந்த பில் வந்துள்ளது என்று சம்பந்தப்பட்ட டி மொபைல் டெலிகாம் நிறுவனத்தை தொடர்பு கொண்டு செலினா விளக்கம் கேட்டுள்ளார். இதன் அடிப்படையில் சில முக்கிய தகவல்கள் வெளிவந்துள்ளன. அதாவது செலினாவின் சகோதரர்கள் மாற்றுத் திறனாளிகாக உள்ளனர். அவர்கள் ஒரு வாரத்திற்கு அமெரிக்காவில் இருந்து கனடாவுக்கு சென்று அங்கு தங்கியுள்ளார்கள்.
டி மொபைல் விதிகளின்படி வெளிநாட்டில் இருந்து கொண்டு சேவையை பயன்படுத்தினால் அவர் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். அந்த வகையில் சகோதரர்கள் 2 பேரும் டேட்டாவை அதிகம் பயன்படுத்தியுள்ளனர். வெளிநாட்டில் இருந்து கொண்டு சேவையை பயன்படுத்தியதால் விதிகளின்படி, கட்டணம் எகிறியுள்ளது. அந்த வகையில் செலினாவுக்கு இலங்கை ரூபாய் மதிப்பில் 6.43 கோடி ரூபாய் கட்டணம் வந்துள்ளது
செலினாவின் தரப்பில் தான் மொபைல் நிறுவனத்தின் விதிகளை சரியாக படிக்கவில்லை என்று கூறியுள்ளார். இதுதொடர்பான செய்திகள் அமெரிக்க ஊடகங்களில் வெளியான நிலையில், செலினாவுக்கு அனுப்பப்பட்ட பில் அநியாயமானது என்று விமர்சனங்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து டி மொபைல் நிறுவனம் கட்டணத்தை ரூ. 2 லட்சமாக குறைத்து அதை செலுத்த 6 மாதங்கள் தவணை அளித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago