Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Freelancer / 2025 மார்ச் 16 , பி.ப. 12:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவால் தேடப்பட்டு வந்த லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் முக்கிய பயங்கரவாதியான அபு கட்டால் என்ற பைசல் நதீம், நேற்று (15) இரவு சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஜம்மு காஷ்மீரை மையமாக வைத்து இந்தியாவில் பாக்கிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்புகள் பல்வேறு தாக்குதலை முன்னெடுத்து இருக்கின்றன. இதனால் பறிபோன உயிர்கள் ஏராளம்.
இந்நிலையில், லஷ்கர்-இ-தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி அபு கட்டால், பாகிஸ்தானில் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவால் தேடப்பட்டு வந்த லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் முக்கிய பயங்கரவாதியான அபு கட்டால் என்ற பைசல் நதீம், நேற்று (15) இரவு சுட்டுக் கொல்லப்பட்டார்.
கடந்த 2008இல் மும்பையில் நடத்தப்பட்ட தாக்குதல், 2023இல் ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரியில் நடத்த தாக்குதல் ஆகியவற்றுக்கும், பைசலுக்கும் தொடர்பு இருப்பது என்ஐஏ பதிவுகளின்படி உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் இருந்துகொண்டு லஷ்கர்-இ-தொய்பா அமைப்புக்காக ஆட்கள் சேர்த்தல், ஜம்மு காஷ்மீரில் சிறுபான்மை சமூகம், பாதுகாப்பு படையினருக்கு எதிரான தாக்குதல் போன்றவற்றிலும் இவர் மூளையாக செயற்பட்டது என்.ஐ.ஏ., குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
11 minute ago
15 minute ago
23 minute ago