Editorial / 2019 பெப்ரவரி 08 , மு.ப. 03:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரேஸிலின் முன்னாள் ஜனாதிபதி லூயிஸ் இனாஷியோ லூலா த சில்வாவுக்கு, மேலும் 12 ஆண்டுகளும் 11 மாதங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மாபெரும் ஊழல் மோசடியில் ஈடுபட்ட ஒரு நிறுவனத்திடமிருந்து, புதுப்பித்தல் பணிகளைப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டிலேயே அவர் குற்றவாளியாக இனங்காணப்பட்டார்.
பிரேஸிலின் மிகவும் பிரபலமான அரசியல்வாதிகளில் ஒருவரான லூலா, ஏற்கெனவே 12 ஆண்டுகளுக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் உள்ளார். கடற்கரையொன்றுக்கு முன்னாலிருந்த சொத்தொன்றில் புனரமைப்பு வேலைகள் தொடர்பாகவே அவருக்கு இத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
பண்ணை வீடொன்று தொடர்பாகவே புதிய குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது. குறித்த பண்ணை வீட்டை, ஓ.ஏ.எஸ் என்ற குழு நிறுவனமே திருத்தியமைத்திருந்தது. லூலாவின் வழக்கறிஞர்கள், குறித்த வீடு அவருடையது அல்லவெனவும், அவரது நண்பரொருவரின் வீடே எனவும் வாதிட்டனர்.
ஆனால், அவ்வீட்டின் உரிமையாளரை விட, அப்போதைய ஜனாதிபதியான லூலாவே, அவ்வீட்டுக்கு அதிகமாக விஜயம் செய்தாரெனக் குறிப்பிட்ட நீதிபதி, அவ்வீட்டின் புனரமைப்புக்காக லூலாவே உத்தரவிட்டார் எனவும் தெரிவித்தார். அதன் புனரமைப்புக்காக, சுமார் 270,000 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் செலவானது எனத் தெரிவித்த நீதிபதி, ஜனாதிபதியாக இருந்தமையைப் பயன்படுத்தியே, அப்பணியை லூலா மேற்கொண்டிருந்தார் எனக் குறிப்பிட்டார்.
எனினும், லூலா மீதான இத்தண்டனைக்கெதிராக மேன்முறையீடு செய்யப்போவதாக, அவரது வழக்கறிஞர்கள் அறிவித்துள்ளனர்.
35 minute ago
9 hours ago
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
9 hours ago
05 Nov 2025