2025 மே 20, செவ்வாய்க்கிழமை

வயாகராவால் ஆபத்து; ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

Ilango Bharathy   / 2022 ஏப்ரல் 11 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

வயாகரா (Viagra )மற்றும்  சியாலிஸ் (Cialis) போன்ற மாத்திரைகள் குறித்து கனடாவின் வான்கூவரிலுள்ள  பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் அண்மையில் மேற்கொண்ட ஆய்வில் அதிர்ச்சி தரும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

குறித்த ஆய்வில் ”வயாகரா மற்றும் cialis போன்ற மாத்திரைகளை தொடர்ந்து எடுத்துக் கொள்ளும் ஆண்களுக்கு மற்ற ஆண்களை விட கண்பார்வை பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு 85 சதவீதம்  அதிகமாக   உள்ளதாகத் தெரியவந்திருக்கிறது.

அதனால் வயாகரா போன்ற மாத்திரைகளை தொடர்ந்து எடுத்துக் கொள்வோர் தங்களுக்கு கண் பார்வையிலிருந்து பிரச்சினை ஏற்படுவதை உணர்ந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். .

மேலும் இவ்வகையான மாத்திரைகள், பாலின உறுப்புகளுக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் அதே நேரத்தில் உடலின் மற்ற பாகங்களுக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்துவதால் கண்களுக்கு செல்லும் இரத்த ஓட்டம் குறைவடைந்து  இப்  பாதிப்பு ஏற்படலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X