2025 பெப்ரவரி 09, ஞாயிற்றுக்கிழமை

வெளியேறும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கோரிக்கை

Freelancer   / 2025 பெப்ரவரி 03 , பி.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக சுகாதார அமைப்புக்கு அதிக நிதி வழங்கும் அமெரிக்கா வெளியேறுவதால் உலகளாவிய சுகாதார நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்படும். எனவே, அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மாற்ற வேண்டும் என்ற கருத்து பரவலாக எழுந்துள்ளது.

இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் வரவு-செலவு திட்ட கூட்டம் நடைபெற்றது. இதில், உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். அமெரிக்க பிரதிநிதிகள் பங்கேற்கவில்லை.

இக்கூட்டத்தில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ் பேசியதாவது:-

“உலக சுகாதார அமைப்பானது இன்னும் சில தரவுகளை அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு வழங்கி வருகிறது. அவர்களுக்கு தகவல் தேவைப்படுவதால் நாம் தொடர்ந்து அவர்களுக்கு தகவல்களை தந்துகொண்டிருக்கிறோம். 

“நீங்கள் (மற்ற நாடுகளின் பிரதிநிதிகள்) அமெரிக்காவை தொடர்புகொண்டு, வெளியேறும் முடிவை மறுபரிசீலனை செய்யும்படி அழுத்தம் கொடுக்கவேண்டும்.

“அமெரிக்கா வெளியேறுவது வெறும் நிதியைப் பற்றியது மட்டுமல்ல. எதிர்காலத்தில் அமெரிக்கா எதிர்கொள்ளவிருக்கும் தொற்றுநோய் குறித்த விவரங்கள் மற்றும் பிற முக்கியமான சுகாதார பிரச்சினைகளில் உள்ள வெற்றிடத்தை பற்றியது. நோய் தொற்றுகள் குறித்த முக்கியமான தகவல்களை அமெரிக்கா தவறவிடவேண்டியிருக்கும்” என்றார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X