2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

விடுவிக்கப்பட்டார் பிரேஸிலின் முன்னாள் ஜனாதிபதி தெமர்

Editorial   / 2019 மார்ச் 27 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரேஸிலின் முன்னாள் ஜனாதிபதி மிச்செல் தெமரை, அந்நாட்டின் மத்திய மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதி இவான் அதி சிறையிலிருந்து நேற்று முன்தினம் விடுதலை செய்துள்ளார்.

அந்தவகையில், மோசடிக் குற்றச்சாட்டுக்களில் கடந்த வாரம் மிச்செல் தெமர் கைதுசெய்யப்பட்டிருந்தநிலையில், அரசியல் மோசடிக்கெதிரான பிரேஸிலின் சவாலை குறித்த விடுதலை வெளிக்காட்டுகிறது.

2016ஆம் ஆண்டு தொடக்கம் 2018ஆம் ஆண்டு வரை ஜனாதிபதியாகப் பதவி வகித்த மிச்செல் தெமர், பல்வேறு திட்டங்களூடாக 472 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கையூட்டுகளைப் பெற்ற அல்லது ஒழுங்குபடுத்திய குற்றவியல் நிறுவனமொன்றை மிச்செல் தெமர் தலைமை தாங்கினார் என மத்திய அரச வழக்குத்தொடருநர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இந்நிலையில், தான் எந்தத் தவறும் செய்யவில்லை என மிச்செல் தெமர் மறுத்திருந்தநிலையில், அவர் சுதந்திரமாக உள்ளபோதே விசாரணை செய்யலாம் என வாதாடி, அவரின் விடுதலைக்கு அவரது வழக்கறிஞர்கள் மேன்முறையிட்டிருந்தனர்.

அந்தவகையில், றியோ டி ஜெனீரோவில் தான் தடுத்து வைக்கப்பட்டிருந்த மத்திய பொலிஸ் நிலையத்திலிருந்து, கள்ளன் எனக் கைப்பற்றிய ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு மத்தியில் நேற்று முன்தினம் மாலையில் வெளியேறியிருந்தார்.

இந்நிலையில், மிச்செல் தெமரை விடுவிக்கும் முடிவுக்கெதிராக தாம் முறையீடு செய்யவுள்ளதாக அறிக்கையொன்றில் தெரிவித்துள்ள மத்திய சட்டமா அதிபர் அலுவலகம், தமது மேன்முறையீடு முழு அமர்வு நீதிபதிகளால் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X