2025 மே 20, செவ்வாய்க்கிழமை

விருது விழாவில் உரையாற்றிய உக்ரேன் ஜனாதிபதி

Ilango Bharathy   / 2022 ஏப்ரல் 04 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இசை உலகில் மிகப்பெரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும், 64 ஆவது  கிராமி விருதுகள் வழங்கும் விழா  நேற்றைய தினம்(03) அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்றது.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த இசை ஜாம்பவான்கள் கலந்து கொண்ட இவ்விருது  விழாவில் இசைத்துறையில் சிறந்த பங்காளிப்பாற்றும் கலைஞர்களுக்கு சுமார்  86 பிரிவுகளின் கீழ்  விருதுகள் வழங்கப்பட்டுள்ளதாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவ் விழாவின் போது ஒளிபரப்பப்பட்ட  காணொளியில் தோன்றிய உக்ரேன் ஜனாதிபதி  ஜெலன்ஸ்கி ”இசைக்கு நேர் மாறானது, போரால் சிதிலமடைந்திருக்கும் நகரங்களும், உயிரிழந்த பொதுமக்களின் அமைதியும் தான்.

எனவே அந்த அமைதியை உங்கள் இசையால் நிரப்புங்கள், இன்றே நிரப்புங்கள், அதில் எங்கள் கதையை கூறுங்கள்” என  உருக்கமாகக் கேட்டுக் கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X