2025 மே 17, சனிக்கிழமை

வீடுகளை இழந்த மக்களுக்குப் புதிய வீடுகள்

Ilango Bharathy   / 2023 பெப்ரவரி 27 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

துருக்கி- சிரிய எல்லையில் கடந்த 6 ஆம் திகதி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கமானது முழு உலகையே சோகத்தில் ஆழ்த்தியது.

இந்நிலநடுக்கத்தால் இருநாடுகளையும் சேர்ந்த  சுமார்  40,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில்,  பாதிப்படைந்த பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடர்ந்தும்  இடம்பெற்று வருகின்றன.

அதேசமயம் 1,60,000 க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்த நிலையில், சுமார் 15 லட்சம் மக்கள் மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.

இந்நிலையில்  துருக்கியில் வீடுகளை இழந்த மக்களுக்கு புதிதாக வீடுகளைக் கட்டும் பணிகள்  ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 துருக்கியில் இன்னும் சில மாதங்களில் ஜனாதிபதித்  தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஓராண்டுக்குள் மக்களுக்கு வீடுகள் கட்டித் தரப்படும் என அந்நாட்டு ஜனாதிபதி தையிப் எர்டோகன் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .