Ilango Bharathy / 2022 டிசெம்பர் 21 , மு.ப. 09:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனடாவின், டொரண்டோ நகரிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றில், மர்ம நபர் ஒருவர் வீடுவீடாகப் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 18 ஆம் திகதி இடம்பெற்ற இச் சம்பவத்தில், 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர் எனவும், ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் குறித்த நபர் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் அந்நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இத்தாக்குதலுக்கான காரணம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கனடாவில், கைத்துப்பாக்கிகளின் விற்பனைக்குத்தடை விதிக்கப்பட்டு, 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அண்மைக்காலமாக, அங்கு துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago