2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

வெனிசுவேலா மீது புதிய தடைகளை விதித்தது ஐ. அமெரிக்கா

Editorial   / 2019 பெப்ரவரி 27 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய தடைகள் மூலம் வெனிசுவேலா அரசாங்கத்தை, ஐக்கிய அமெரிக்கா நேற்று முன்தினம் இலக்கு வைத்துள்ளது.

பயங்கர வன்முறை காரணமாக, மனிதாபிமான உதவி, வெனிசுவேலாவை சென்றடைவது கடந்த வாரயிறுதியில் தடுக்கப்பட்டமையைத் தொடர்ந்தே புதிய தடைகளை விதித்துள்ள ஐக்கிய அமெரிக்கா, வெனிசுவேலா அரசால் நிர்வகிக்கப்படும் எண்ணெய் நிறுவனமான பி.டி.வி.எஸ்.ஏ-இன் சொத்துக்களை முடக்குமாறு நட்பு நாடுகளைக் கோரியுள்ளது.

இதேவேளை, தன்னைத் தானே ஜனாதிபதியாக அறிவித்துக் கொண்ட வெனிசுவேலாவின் எதிர்க்கட்சித் தலைவர் குவான் குவைடோவுக்கு உயிராபத்து இருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளதாக கொலம்பிய வெளிநாட்டமைச்சர் கார்லோஸ் ஹொல்மேஸ் ட்ரூஜில்லோ தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், வெனிசுவேலாவிலுள்ள நிலமையை கலந்துரையாடுமாறு, ஐக்கிய நாடுகளில் பாதுகாப்புச் சபைக்கு அழுத்தம் கொடுக்கும் நடவடிக்கையை ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் ஆரம்பித்துள்ளது.

வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோ அரசாங்கத்துடனுள்ள வெனிசுவேலாவின் மாநில ஆளுநர்கள் நால்வர் மீது தடைகளை விதித்துள்ள ஐக்கிய அமெரிக்க திறைசேரி திணைக்களம், ஐக்கிய அமெரிக்காவில் அவர்கள் கட்டுப்படுத்தும் எந்தச் சொத்துக்களையும் முடக்கியுள்ளது.

ஐக்கிய அமெரிக்காவின் துணை ஜனாதிபதி மைக் பென்ஸையும் வெனிசுவேலாவின் நெருக்கடிக்கு அமைதித் தீர்வை எதிர்பார்க்கும் லிமா குழுவின் அங்கத்தவர்களையும் குவான் குவைடோ சந்தித்திருந்த நிலையில், கொலம்பியத் தலைநகர் பொகோட்டோவில் வைத்தே குறித்த தடைகள் அறிவிக்கப்பட்டிருந்தன.

ஜனாதிபதி மதுரோவை அகற்றுவதற்கான அனைத்துத் தெரிவுகளையும் கவனத்திற் கொள்ளுமாறு லிமா குழுவை குவான் குவைடோ வலியுறுத்தியபோதும், ஜனநாயகத்தான மாற்றமானது வெனிசுவேலாவியவர்களால் அமைதியாக, அரசமைப்பு, சர்வதேச சட்டத்தின் கீழ் இடம்பெறவேண்டும் என லிமா குழு அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X