Freelancer / 2022 பெப்ரவரி 02 , பி.ப. 01:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்தில் கடந்த 2020-ம் ஆண்டு முழு ஊரடங்கு அமலில் இருந்தபோது விதிமுறைகளை மீறி பிரதமர் இல்லத்தில் விருந்து நிகழ்ச்சிகள் நடைபெற்றாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த விவகாரம் தொடா்பாக லண்டன் போலீசார் அண்மையில் விசாரணையை தொடங்கினர். அதுதொடா்பான முக்கிய தகவல்கள் அடங்கிய 12 பக்க அறிக்கை வெளியானது.
அதில் ஊரடங்கு அமலில் இருந்தபோது பிரதமர் இல்லம் மற்றும் அலுவலகத்தில் விருந்து நிகழ்ச்சிகள் நடந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இது பிரதமர் போரிஸ் ஜான்சனின் பதவிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அவரது சொந்த கட்சியினரே அவரை பதவியில் இருந்து விலக வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ஊரடங்கின்போது விதிமுறையை மீறி நடந்த விருந்து நிகழ்ச்சிகளுக்காக போரிஸ் ஜான்சான் நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கோரினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
“மன்னிக்கவும். மக்களின் கோபம் எனக்குப் புரிகிறது. நாம் கண்ணாடியில் நம்மை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். தவறுக்கு வருந்துகிறேன். அதே சமயம் இதை சரிசெய்வேன் என்பதில் உறுதியாக இருக்கிறேன்” என்றார்
1 hours ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago