2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

வெள்ளத்தால் 35 பேர் உயிரிழப்பு

Editorial   / 2019 ஏப்ரல் 01 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கு ஆப்கானிஸ்தானில் வெள்ளத்தால் குறைந்தது 35 பேர் கொல்லப்பட்டதுடன், வீடுகள் அழிவடைந்ததுடன், இடம்பெயர்ந்த குடும்பங்களைக் கொண்டிருந்த தற்காலிகக் கூடாரங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தானின் தேசிய இடர் முகாமைத்துவ அதிகாரசபையின் பேச்சாளரொருவரான ஹஷ்மட் பகதுரி தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை பரவ ஆரம்பித்த கடும் மழைகளாலேயே வெள்ளங்கள் ஏற்பட்டதுடன், ஏழு மாகாணங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஃபர்யாப்பில் வெள்ளங்களால் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டதுடன், ஹெராட் மாகாணத்தில் 10 பேர் கொல்லப்பட்டதாகவும், பட்ஜ்ஹிஸ் மாகாணத்தில் எட்டுப் பேர் கொல்லப்பட்டதாகவும், பல்க் மாகாணத்தில் ஐந்து பேர் கொல்லப்பட்டதாகவும் ஹஷ்மட் பகதுரி தெரிவித்துள்ளதுடன், 3,000க்கும் மேற்பட்ட வீடுகள் அழிவடைந்துள்ளதாகக் கூறியுள்ளார்.

இதேவேளை, மேலும் 12 பேர் காணமல் போயுள்ளதுடன், 700க்கும் மேற்பட்ட வீடுகள் மோசமாகப் பாதிப்படைந்துள்ளதாகக் கூறியுள்ளார்.

தலிபான்களுடனான 17 ஆண்டு காலப் போரிலும், கடந்தாண்டு வறட்சியாலும் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்த நிலையில், கடந்த மாதத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் மேலும் அழிவுகள் ஏற்பட்டிருந்த நிலையில் இவ்வாண்டு கோதுமை அறுவடை அபாயத்தைச் சந்தித்துள்ளது.

இந்நிலையில், சில பகுதிகளுக்கான தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள ஹெராட்டிலுள்ள ஆப்கானிஸ்தான் செம்பிறைச் சங்கத்தின் பணிப்பாளர், பாதிக்கப்பட்ட மக்களை மீட்பு அணிகள் சென்றடைவது தடுக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

இதுதவிர, மோசமான உள்கட்டமைப்புகளாலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை மீட்புப் பணியாளர்கள் சென்றடைவது கடினமாகவுள்ளது.

ஆப்கானிஸ்தானில் வெள்ளம் ஏற்படுவது வழமை என்றபோதும், வழமையாக கடும் பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X