Janu / 2026 மார்ச் 31 , பி.ப. 06:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்க அதிபரின் உத்தியோகபூர்வ இல்லமான வெள்ளை மாளிகையில் நடைபெற்ற 'முதல் பெண்மணிகள் மாநாட்டில்', வங்காள மொழி உட்பட 11 மொழிகளில் பேசும் ஆற்றல் கொண்ட அதிநவீன மனித ரோபோ (Humanoid Robot) அறிமுகம் செய்யப்பட்டது.
உலகளாவிய ரீதியில் நாடுகளுக்கிடையிலான புரிந்துணர்வை ஏற்படுத்தும் நோக்கில், 45 நாடுகளின் முதல் பெண்மணிகள் பங்கேற்ற விசேட மாநாடு அமெரிக்காவில் நடைபெற்றது. இந்நிகழ்வில், அமெரிக்காவின் 'ஃபிகர்' (Figure) ரோபோட்டிக்ஸ் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட மனித ரோபோ, வெள்ளை மாளிகையின் முதலாவது ரோபோ விருந்தினராக அறிமுகப்படுத்தப்பட்டது.
மாநாட்டிற்குத் தலைமை தாங்கிய அமெரிக்காவின் முதல் பெண்மணி மெலனியா ட்ரம்ப்புடன் இணைந்து மேடைக்கு வந்த இந்த ரோபோவிற்கு 'ஃபிகர் 3' (Figure 3) என பெயரிடப்பட்டுள்ளது. இது கூட்டத்தில் பங்கேற்ற வெளிநாட்டு முதல் பெண்மணிகளை ஆங்கிலம், ஸ்பானிஷ், பிரெஞ்சு, போர்த்துக்கேயம், அரபு, ஜப்பானியம், ஹீப்ரு, ஸ்லோவேனியன், உக்ரேனியன் மற்றும் ஜார்ஜியன் உள்ளிட்ட 11 மொழிகளில் வரவேற்றது. குறிப்பாக, வங்காள மொழியில் 'ஸ்வாகதம்' எனக் கூறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
வீட்டு வேலைகளைச் செய்வதற்காகவே விசேடமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரோபோவில், சூழலை அவதானிக்க ஏதுவான கமராக்கள் மற்றும் நவீன உணர் கருவிகள் (Sensors) பொருத்தப்பட்டுள்ளன.
நிகழ்வில் உரையாற்றிய மெலனியா ட்ரம்ப் தெரிவித்ததாவது:
"என்னுடன் இணைந்தமைக்காக 'ஃபிகர் 3' ரோபோவிற்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். வெள்ளை மாளிகைக்கு விருந்தினராக வருகை தந்த, அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட முதலாவது மனித ரோபோ நீயே ஆகும்.
கற்றலில் செயற்கை நுண்ணறிவின் (AI) பயன்பாடு, மனித ரோபோ ஆசிரியர்கள் மற்றும் பொருளாதார ஊக்குவிப்பில் தொழில்நுட்பத்தின் பங்கு ஆகியவையே அடுத்த தலைமுறையைத் தீர்மானிக்கும் மூன்று முக்கிய தூண்களாக அமையவுள்ளன. செயற்கை நுண்ணறிவின் எதிர்காலம் மனித உருவம் கொண்டது. மிக விரைவில், செயற்கை நுண்ணறிவு எமது கைபேசிகளில் இருந்து வெளியேறி, மக்களுடன் நேரடியாகத் தொடர்புகொள்ளக்கூடிய மனித ரோபோக்களாக உருவெடுக்கும்." இவ்வாறு அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

2 hours ago
4 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago
4 hours ago