Mithuna / 2024 ஜனவரி 07 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் மூன்று மாதங்களாக நீடித்து கொண்டிருக்கிறது. ஹமாஸ் ஆட்சி செய்து வரும் காசா மீது இஸ்ரேல் மும்முனை தாக்குதல் நடத்தி வருகிறது.
முதலில் வடக்கு காசாவில் தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல் இராணுவம், தற்போது மத்திய, தெற்கு காசாவிலும் தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. இதில் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
இந் நிலையில் வடக்கு காசாவில் ஹமாஸ் அமைப்பின் இராணுவ கட்டமைப்புகளை முற்றிலும் அழித்து விட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரி கூறும்போது, “வடக்கு பகுதியில் ஹமாஸின் இராணுவ கட்டமைப்பை அழிக்கும் பணியை முடித்து விட்டோம்.
தற்போது மத்திய மற்றும் தெற்கு காசாவில் ஹமாஸ் அமைப்பை அழிப்பதில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கு சில காலம் எடுக்கும் ஹமாஸ் அமைப்பினர் தளபதிகள் இல்லாமல் செயல்பட்டு வருகிறார்கள்.
மத்திய காசா பகுதியில் உள்ள அகதிகள் முகாம்களில் ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி உள்ளனர். தெற்கு காசாவில் கான்யூனுஸ் நகரில் பெரிய நகர்ப்புற நிலப்பரப்பில் சுரங்கப்பாதைகள் உள்ளன. மத்திய, தெற்கு காசாவில் ஹமாசை அழித்து இராணுவம், வேறு வழிகளில் செயல்படும்.” என தெரிவித்துள்ளார்.
50 minute ago
2 hours ago
2 hours ago
10 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
2 hours ago
2 hours ago
10 May 2026