Freelancer / 2026 மார்ச் 27 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியா, சீனா, ரஷ்யா உட்பட 5 நட்பு நாடுகளின் சரக்கு கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கிடையே, போர் நிறுத்தம் ஏற்படுத்த ட்ரம்ப் அறிவித்த 15 அம்ச திட்டம் நியாயமற்றது. பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா ஏற்பாடு செய்யவில்லை என்று ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப்படைகள் மற்றும் ஈரான் இராணுவத்துக்கு இடையே போர் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணெய், எல்.பி.ஜி. எரிபொருள் கொண்டு செல்லும் கப்பல்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. ஒரு சில கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதனால் நூற்றுக்கணக்கான சரக்கு கப்பல்கள் அங்கு காத்துக் கிடந்தன.
இந்திய கப்பல்களுக்கு அனுமதி வழங்கும்படி ஈரான் அரசுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இதேபோல, ஈரானின் நட்பு நாடுகளும் பேச்சு நடத்தின. இதையடுத்து இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா மற்றும் ஈராக் ஆகிய நட்பு நாடுகளின் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்ல ஈரான் அனுமதி வழங்கியுள்ளது.
இதுகுறித்து ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி கூறும்போது, ஈரான் போர் சூழலில் உள்ளது. மேற்கு ஆசியா போர்க்களமாக உள்ளது. இதனால், இங்கு எதிரி நாடுகளின் கப்பல்கள் செல்ல அனுமதிக்க முடியாது. மற்றவர்களுக்கு ஹார்முஸ் ஜலசந்தி திறந்தே உள்ளது என்றார். (a)

7 hours ago
9 hours ago
16 May 2026
16 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
16 May 2026
16 May 2026