Editorial / 2019 பெப்ரவரி 13 , பி.ப. 11:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஹெய்ட்டியின் ஜனாதிபதி ஜொவெனெல் மொய்ஸே பதவி விலக வேண்டுமெனக் கோரி இடம்பெற்றுவரும் போராட்டங்களின் ஓர் அங்கமாக, அங்கு மேற்கொள்ளப்பட்ட சிறையுடைப்புக் காரணமாக, 78 கைதிகள் தப்பியோடியுள்ளனர். மறுபக்கமாக, பதவி விலகக் கோரும் போராட்டங்களில் ஏற்பட்ட உயிரிழப்புகளும் அதிகரித்தவண்ணமுள்ளன.
நாட்டின் தெற்குப் பகுதிக் கரையோரத்திலுள்ள அக்குய்ன் என்ற பகுதியிலுள்ள சிறைச்சாலையிலிருந்தே, 78 கைதிகள் தப்பியோடியுள்ளனர். இவர்கள், நண்பகல் வேளையிலேயே இவ்வாறு தப்பியோடியுள்ளனர் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
என்ன சூழ்நிலையில் இச்சிறையுடைப்பு இடம்பெற்றது எனத் தெளிவாகவில்லை. ஆனால், சிறைச்சாலைக்கு அருகிலுள்ள பொலிஸ் நிலையமொன்றுக்கு முன்னால்,
ஜனாதிபதிக்கெதிரான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்த போதே, சிறையுடைப்பு இடம்பெற்றதென, சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
அதேபோல், சிறைச்சாலையிலிருந்து 120 கிலோமீற்றர்கள் வடக்காக உள்ள பகுதியிலும், மோதல்கள் இடம்பெற்றனவென அதிகாரிகள் தெரிவித்தன். ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள், வீதியில் இறங்கிப் போராடினர். அவர்களைப் பொலிஸார் கலைத்த பின்னர், அவர்களில் சிலர், கார்களை எரித்தும் கடைகளில் சூறையாடியும், தமது எதிர்ப்பையும் எரிச்சலையும் வெளிப்படுத்தினர்.
ஜனாதிபதிக்கெதிரான தேசியமட்டப் போராட்டங்கள் இம்மாதம் 7ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட பின்னர், இதுவரையிலும் குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
நாட்டின் பொருளாதார வீழ்ச்சி, பொருளாதாரச் சமத்துவமின்மை, நீதித்துறையின் தாமதத் தன்மை உள்ளிட்ட விடயங்கள் காரணமாக, ஜனாதிபதிக்கு எதிராக எழுந்த போராட்டங்கள், தொடர்ந்தும் பரவி வருகின்றன. வேலையில்லாத் திண்டாட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கு ஜனாதிபதி தடுமாறும் நிலையில், போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தடுமாறுகிறது.
6 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
9 hours ago