Editorial / 2019 ஜனவரி 17 , பி.ப. 10:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷிலிருந்து இவ்வாண்டின் ஆரம்பத்திலிருந்து 1,300க்கும் மேற்பட்ட றோகிஞ்சாக்கள் இந்தியாவுக்குள் கடந்து சென்றதாக அதிகாரியொருவர் நேற்று தெரிவித்துள்ளார். மியான்மாருக்கு நாடுகடத்தப்படுவோம் என்ற அச்சத்திலேயே அவர்கள் இந்தியாவுக்குள் சென்றதாக நம்பப்படுகிறது.
தமது பாதுகாப்புத் தொடர்பாக மியான்மாரில் அச்சத்தை எதிர்கொள்கின்ற றோகிஞ்சாக்களை கடந்த மாதங்களில் மியான்மாரிடம் கையளித்தற்காக ஐக்கிய நாடுகளிடமிருந்தும் மனித உரிமைகள் குழுக்களிடமிருந்தும் சர்வதேச சட்டத்தை மீறுவதாக இந்தியா குற்றஞ்சாட்டப்படுகின்ற நிலையிலேயே மேற்குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஐக்கிய நாடுகளின் அகதித் தீர்மானத்தில் கைச்சாத்திட்டிருக்காத இந்தியா, கடந்தாண்டு றோகிஞ்சாக்கள் 230 பேரை கைது செய்திருந்தது. குறித்த எண்ணிக்கையானது அண்மைய ஆண்டுகளில் அதிகூடிய எண்ணிக்கை ஆகும். இடம்பெயர்ந்துள்ள றோகிஞ்சாக்கள் நாடுகடத்தப்பட வேண்டுமென இந்துத் தேசியவாதிகள் கோருகின்றனர்.
இதுதவிர, றோகிஞ்சாக்களது ஆவணங்கள் தொடர்பான துன்புறுத்தல் உள்ளடங்கலாக உள்ளூர் புலனாய்வு அதிகாரிகளது அடிக்கடி விஜயங்களை றோகிஞ்சாக்கள் எதிர்கொள்வதாகத் தெரிவித்துள்ள தெற்காசிய மணித உரிமைகள் ஆவணக் காப்பகத்தின் ரவி நாயர், ஜம்மு காஷ்மிரிலிருந்து திரிபுரா வரை, அசாம், மேற்கு வங்க மாநிலங்களில் 200க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
36 minute ago
9 hours ago
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
9 hours ago
05 Nov 2025