Ilango Bharathy / 2021 டிசெம்பர் 23 , மு.ப. 10:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆபிரிக்க நாடான மடகாஸ்கரில் ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளான நிலையில், அதில் பயணித்த அமைச்சரொருவர் 12 மணி நேரம் கடலில் நீந்தி உயிர்பிழைத்துள்ள சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
செர்ஜி கெல்லே என்ற அமைச்சரே இவ்வாறு கடலில் நீந்தி உயிர்பிழைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டின் வடகிழக்கு பகுதியில் அண்மையில் சட்டவிரோதமாக பயணிகளை ஏற்றிச் சென்ற சரக்கு கப்பல் கவிழ்ந்த விபத்தில், 64 பேர் உயிரிழந்ததுடன் மேலும், 20க்கும் மேற்பட்டோர் காணாமற்போயுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இப் விபத்து நிகழ்ந்த இடத்தை பார்வையிட சென்ற போதே குறித்த அமைச்சர் பயணித்த செர்ஜி கெல்லே ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஹெலிகொப்டரின் இருக்கையைப் படகு போல பயன்படுத்தி கடலில் நீந்தி அவர் கரையை அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய அமைச்சர், தான் மரணமடையும் நேரம் இன்னும் வரவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
10 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
26 minute ago