2025 மே 20, செவ்வாய்க்கிழமை

14 வருடங்களாக விமான நிலையத்தில் வசிக்கும் நபர்; காரணம் தெரிந்தால் அதிர்ச்சி அடைவீர்கள்

Ilango Bharathy   / 2022 ஏப்ரல் 04 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவச் சேர்ந்த நபர் ஒருவர் கடந்த 14 வருடங்களாக விமான நிலையத்தில் வசித்து வரும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனத் தலைநகர் பெய்ஜிங்கை சேர்ந்த வீ ஜியாங்குவோ என்பவரே இவ்வாறு விமான நிலையத்தில் வசித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அவர் கருத்துத் தெரிவிக்கையில் ” எனக்கு மது அருந்தும் பழக்கமும், புகைப் பிடிக்கும் பழக்கமும் உள்ளது. 

எனினும் இதற்கு எனது குடும்பத்தினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.குறிப்பாக  நான் வீட்டில் தங்க விரும்பினால் புகைப்பதையும் குடிப்பதையும் விட்டுவிட வேண்டும் என்றும் அவ்வாறு செய்யாவிட்டால் என்னுடைய மாதாந்திர அரசு உதவித் தொகையான 1000 யுவான்களை (150 அமெரிக்க டொலர்கள்) அவர்களுக்கு வழங்க வேண்டும் எனவும்  கூறுகிறனர்.

பணத்தை அவர்களிடம் கொடுத்து விட்டால் மது மற்றும் சிகரெட் செலவிற்கு நான் என்ன செய்ய முடியும்?” அதனால் தான் விமான நிலையத்தில் வசித்து வருகின்றேன். ஆரம்பத்தில் நான் விமான நிலையத்தில் தங்குவதற்கு அதிகாரிகள் மறுப்புத் தெரிவித்தனர். எனினும் நாளடைவில் அதிகாரிகள் என்னைத் தொந்தரவு செய்வதை விட்டுவிட்டனர்” என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X