2025 மே 19, திங்கட்கிழமை

21 வருடங்களுக்குப் பின்னர் தோண்டி எடுக்கப்பட்ட ‘முல்லா உமரின்‘ கார்

Ilango Bharathy   / 2022 ஜூலை 11 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}



கடந்த 2001 ஆம் ஆண்டு, அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தின் மீது, தலிபான்கள் தாக்குதல் நடத்திய சம்பவம், உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இத் தாக்குதலுக்கு பின்னர், அமெரிக்க இராணுவப் படை, தாலிபான்களை ஒடுக்குவதற்காக ஆப்கானிஸ்தானில் தீவிர தேடுதல் வேட்டையை நடத்தி இருந்தனர்.இதனால் அந்நாட்டில் தலிபான்களின்  ஆட்சி கலைக்கப்பட்டது.

அச் சமயத்தில், அமெரிக்க படையிடம் இருந்து தப்பிப்பதற்காக தலிபான் அமைப்பை நிறுவிய தலைவர் முல்லா உமர், தான் பயன்படுத்தி வந்த கார் ஒன்றை பயன்படுத்தி, அமெரிக்க இராணுவத்திடம் இருந்து தப்பிச் சென்றாகவும் அக்காரானது பிற்பட்ட காலங்களில் ஆப்கானிஸ்தானில் அமைந்துள்ள கிராமம் ஒன்றில் குழி தோண்டி  புதைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் தற்போது தலிபான்களின் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் சுமார் 21 ஆண்டுகளுக்கு பின்னர்  புதைக்கப்பட்ட  குறித்த காரை தலிபான்கள் மீண்டும் வெளியே எடுத்துள்ளனர் .

தற்போதும் குறித்த காரானது நல்ல நிலையில் இருப்பதாகவும், முன் பக்கம் மாத்திரம் சற்று சேதமடைந்து காணப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ஆப்கானிஸ்தானின் தேசிய அருங்காட்சியகத்தில், குறித்த  காரை தேசிய சின்னமாக வைக்க வேண்டும் என தலிபான்கள் விரும்புவதாகவும் கூறப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X